linoj.do.am

சேவைகள்
CATEGORIES
சமையல்கலை
தாய் சேய் நலன்
அழகு குறிப்பு
ஹலோ தோழியரே
கணினி
கவிதைகள்
பெண்கள் உலகம்
சிறுவர் பூங்கா
உடல்நலம்
தமிழ் சினிமா
ஆன்மீகம்
நகைச்சுவை(ங்க...)!
சர்தார்ஜி
குட்டீஸ்
மருத்துவம் & நீதிமன்றம்
பொது
அரசியல்
குடும்பம்
Email Subscribe

பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Enter your email address:

Serch
Statistics
Online Users

Site Friend
linotech.info
ommuruga.fr
இணைப்பு கொடுக்க
linoj.do.am
Code :
இணையத் தமிழ் உலகம் - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotechinfo.com
LinoTechinfo - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotech.info
LinoTech.info - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.
Vote Plz..
Tamil Top Blogs

My Topsites List
கல்வி
கல்விச்சேவை
யாழ். சென்ஜோன்ஸ்
திருகோணமலை இந்து
சாவகச்சேரி இந்து
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
தமிழ் செஸ்
Jaffna Central - Canada
Vembadi Girl's High School
University of Jaffna
cutsa
University of Moratuwa University of Kelaniya
University of Colombo
The Open Uni of SL
Uni of Sri
University of Peradeniya
Jayewardenepura
Main » Articles » பெண்கள் உலகம் » அழகு குறிப்பு [ Add new entry ]

ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? இதோ வழிமுறைகள்

பெண்களுக்கு அழகு சேர்ப்பதில் முக்கியமான இடம் பிடிப்பது அவர்களின் கூந்தல் தான்.

சில பெண்கள் குறைவான கூந்தலை வைத்துக்கொண்டு கிராப் வெட்டி அழகு படுத்துவர், ஒரு சிலர் அதிகமான கூந்தலை வைத்து அழகு பார்ப்பர், எதுவாயினும் பெண்களுக்கு நீளமான கூந்தல் ஒரு தனி அழகுதான்.

அவ்வாறு நீளமான கூந்தலை பெறுவதற்கு கூந்தலின் வேர்கள் வலுவாக இருந்தால் கூந்தல் உதிராமல் பாதுகாக்கலாம்.

கூந்தலுக்கு அவ்வப்போது மசாஜ் செய்வதன் மூலம் வேர்களை வலுவடையச் செய்யலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் மசாஜ் முறைகளை பார்ப்போம்.

எண்ணெய் மசாஜ்

கூந்தல் உதிர்வதைத் தடுக்க அழுக்கு சேராமல் சுத்தமாக வைத்தக் கொள்ள வேண்டும். இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

தினசரி காலை எழுந்தவுடன் 15 நிமிடங்களுக்கு எண்ணெய் கொண்டு விரல் நுனிகளால் தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். வேர்க்கால்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் வேர்க்கால்களின் பலவீனத்தை இது போக்கும்.

அதனால் கூந்தல் உதிர்வது கட்டுப்படுத்தப்படும். எண்ணெய் மசாஜ் கூந்தலின் பளபளப்பை அதிகரிக்க உதவும்.

நீராவி ஒத்தடம்

தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்கி கூந்தலின் வேர்களில் ஆரம்பித்து நுனிவரை தடவவும். விரல் நுனியால் வேர்களை நன்றாக தேய்த்து விடவும். பிறகு வெந்நீரில் ஒரு துணியை நனைத்து, அதை நன்றாக பிழிந்து விடவும்.

சூடான துணியை தலையில் கட்டவும். 15 நிமிடம் கழித்து கூந்தலை சீயக்காய் அல்லது ஷாம்பூவால் கழுவவும்.

வேர்களுக்குள் எண்ணெய் ஊடுறுவ இது உதவும். மாதம் ஒருமுறை இவ்வாறு செய்யலாம். விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றும் சம அளவு எடுத்து லேசாக சூடாக்கித் தலையில் தடவி மசாஜ் செய்து, வெந்நீரில் முக்கிப் பிழிந்த டவலால் தலைக்கு நீராவி ஒத்தடம் தர வேண்டும்.

பிறகு தரமான சீயக்காயோ, ஷாம்புவோ போட்டு கூந்தலை அலச வேண்டும். வாரம் ஒருமுறை இப்படிச் செய்தாலே கூந்தல் உதிர்வு நின்று ஆரோக்கியமாக வளரும்.

கறிவேப்பிலை தைலம்

நூறு மி.லி. தேங்காய் எண்ணெயில் கைப்பிடியளவு கறி வேப்பிலையைப் போட்டுக் கொதிக்க வைத்து, ஆறவிட்டு வடிகட்டி வைத்துக்கொண்டு, அந்த எண்ணெயைத் தினம் தலைக்குத் தடவவேண்டும்.

கூந்தலை நன்றாக விரித்துப்போட்டு வேர்களில் படுமாறு அந்த எண்ணெயை தடவினால் அது கூந்தலை பலப்படுத்தும். கோபுரம் தாங்கி இலை சாறு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி அதை கூந்தலில் பூசி ஊறவைத்து தலை முழுகினால் முடி உதிர்வது நின்று விடும்.

 

தேங்காய்ப்பால் மசாஜ்

ஐந்து டேபிள் ஸ்பூன் திக்கான தேங்காய் பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, கூந்தலின் வேர்களில் படும்படி நன்றாக மசாஜ் செய்து, சிறிது நேரம் அப்படியே விட்டு அலசலாம்.

இளநீர் அதிகம் கிடைக்கிற பட்சத்தில் அதனால் கூந்தலை அலசுவது கூந்தலுக்கு ரொம்பவும் ஆரோக்கியமானது. பத்து கிராம் ஜெலட்டினை ஒரு டம்ளர் தக்காளி ஜூஸில் கரைத்துக் குடிப்பது கூந்தலை மட்டுமின்றி, நகங்களையும் ஆரோக்கியமாக வைக்கும்.

புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப் பூ ஆகியவற்றைப் போட்டு மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சீயக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது.

பொடுகும் வராது. வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து தயிருடன் கலந்து, தலைக்குத் தடவி, சிறிது நேரம் ஊறியவுடன் குளிக்கலாம். சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் இதைத் தவிர்க்கவும்.

இந்த மசாஜ் முறைகளைத் தவிர சிறந்த மன அமைதியும், சத்து நிறைந்த உணவுப் பழக்கங்களும் கூந்தலை பராமரிக்க உதவும்.



Source: http://www.lankasritechnology.com/view.php?200dBnZZdbc44Q6AA334ea6609Fee033HlOmmcddccmOlxx220eFF906aae434oMQQ4cbddZnBdd0
Category: அழகு குறிப்பு | Added by: m_linoj (2014-06-06)
Views: 580 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Login ]